நீரில் மூழ்கி 20 பேர் பலி: விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பில் விபரீதம்

நீரில் மூழ்கி 20 பேர் பலி: விநாயகர் சதுர்த்தி சிலை கரைப்பில் விபரீதம்

மகாராஷ்டிராவில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்வின்போது 20 பேர் நீரில் மூழ்கி பலியானதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த கொண்டாட்டம் நேற்றுவரை நீடித்தது. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். அப்போது நீர்நிலைகளில் மூழ்கி பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள வார்தா மாவட்டத்தில் உள்ள சவாங்கி பகுதியில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வின் போது 3 பேர் உயிரிழந்தனர். அதுபோல் தெல்வி பகுதியில் ஒருவரும், யவாத்மால் பகுதியில் இருவரும், அகமது நகர் மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சம்பவத்தில் இருவரும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது இருவரும் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in