பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு 20 நாட்களுக்கு அன்னதானம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு 20 நாட்கள் அன்னதானம் வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூர் சோமநாதசுவாமி கோயிலில் அன்னதானம் திட்டத்தை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ,கோயில்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு உணவளிக்கும் வகையில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இது வரை 754 கோயில்களில் மதியஅன்னதானம், இதில் 8 கோயில்களில் தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 10 கோயில்களில் இன்று அன்னதானத் திட்டம் தொங்கப்பட்டுள்ளது. இதன்படி, 764 கோயில்களில் 85 ஆயிரம் பக்தர்கள் தினமும் பயனடைந்து வருகின்றனர்.

அன்னதானத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வகையில் செயல்படுத்தப்படும். பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கோரிக்கையை ஏற்று நெல்லையப்பர் கோயிலில் திருவிழா காலங்களில் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தைப்பூசத்தையொட்டி, பழநிக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களின் நலன் கருதி தினமும் 10 ஆயிரம் பேர் வீதம் 20 நாட்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது.  சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்புகள் அனைத்தும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் முழுமை பெறும்போது தமிழக மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும். கோயிலின் சித்திரை குளம், சூரியன் குளம், விநாயகர் கோயில் கோயில் தரைதளம் போன்றவை ரூ.1.5 கோடி மதிப்பில் திருப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இக்கோயிலின் அறங்காவலர்கள் தீவிரமாக பல்வேறு பணிகளை ஆற்றி வருகின்றனர். இதற்கு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து வகையில் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in