2 வயது சிறுமிக்கு 40 நாய்க்கடி: நாட்டை உலுக்கும் இரண்டாவது சோகம்!

அச்சுறுத்தும் நாய் - சித்தரிப்புக்கானது
அச்சுறுத்தும் நாய் - சித்தரிப்புக்கானது

தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் 40 நாய்க்கடிகளுக்கு ஆளான 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். நாட்டை உலுக்கிய ஹைதராபாத் சிறுவன் பலி சம்பவத்தின் தொடர்ச்சியாக சூரத்தில் இரண்டாவது சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் தின்பண்டத்துடன் சென்ற 5 வயது சிறுவனை தெரு நாய்கள் விரட்டிக் கடித்ததில் பரிதாபமாக பலியானான். பிப்.19 அன்று நிகழ்ந்த இதே சம்பவத்தையொட்டி, அதே நாளில் சூரத்திலும் ஒரு கோரம் அரங்கேறியது.

சூரத்தில் கூலித்தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த 2 வயது சிறுமியை பிப்.19 அன்று வீட்டருகே இருந்த தெரு நாய்கள் கடித்துக் குதறின. உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், குழந்தையின் உடலில் இருந்த 40க்கும் மேற்பட்ட நாய்க்கடிகளால் சிகிச்சை அளிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. தடுப்பூசிகள், அறுவை சிகிச்சைகள் என 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்த மருத்துவப் போராட்டத்தின் முடிவில், அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இந்த கோர சம்பவத்தை அடுத்து, சூரத் முனிசிபாலிட்டி அமைப்பு தெரு நாய்களுக்கு கருத்தடை நடவடிக்கைகயை முடுக்கி விட்டுள்ளது. தினசரி 30 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது. ஒரே நாளில் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், தெரு நாய்களுக்கு பிஞ்சுக் குழந்தைகள் இரையாகி உள்ள சம்பவங்கள் அபாய மணியாக பெற்றோருக்கு எச்சரிக்கை உணர்வூட்டி உள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in