வீட்டுக்கு வெளியே விளையாடிய 2 வயது சிறுவன்... மின்னல் தாக்கியதால் நேர்ந்த பரிதாபம்!

வீட்டுக்கு வெளியே விளையாடிய 2 வயது சிறுவன்... மின்னல் தாக்கியதால் நேர்ந்த பரிதாபம்!

மகாராஷ்ட்டிரா மாநிலம் பல்கார் அருகே உள்ள மனோர் பகுதியில் 2 வயது சிறுவன் தனது சகோதரியுடன் அவர்களது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்ட்டிராவின் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், மனோர் பகுதியில் உள்ள அவர்களது வீட்டின் முன் 2 வயது சிறுவன் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறை தலைவர் விவேகானந்த் கடம் தெரிவித்தார். மேலும், பலத்த இடியுடன் கூடிய மழைக்கு மத்தியில் திடீரென மின்னல் தாக்கியது, அப்போது சிறுவன் சுருண்டு விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான், அந்த சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று கூறினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த இதேபோன்ற சோகமான சம்பவத்தில், கும்லாவில் உள்ள தோடாங் பகடோலி கிராமத்தில் கடந்த புதன்கிழமையன்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in