கேரளத்திற்கு சொகுசு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: சோதனைச் சாவடியில் போலீஸ் அதிரடி

கேரளத்திற்கு சொகுசு காரில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தல்: சோதனைச் சாவடியில் போலீஸ் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் கேரளத்திற்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்குத் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் குமரியில் இருந்து கேரளத்திற்குச் செல்லும் அனைத்து பாதைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் நூதன முறையில் கடத்தல்கள் அரங்கேறியே வருகின்றது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் குளச்சல் பகுதியில் இன்று காலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சைமன் காலனி பகுதியில் கேரளப் பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்றுவந்தது. அதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதிகாரிகள் காரை நிறுத்தியதுமே டிரைவர் இறங்கி தப்பியோடிவிட்டார். அந்தக் காருக்குள் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார்விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. சொகுசு காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அதன் பதிவெண்ணை வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in