2 கிமீ தூரம் ஜீப்பில் விரட்டிச் சென்ற போலீஸார்; காரில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்: டிரைவர் எஸ்கேப்

 ரேஷன் அரிசி மூட்டை
ரேஷன் அரிசி மூட்டை

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று ரேசன் அரிசி கடத்தியக் காரை மடக்கிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளத்திற்கு தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும்வகையில் போலீஸார் சோதனைச் சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளனர். இதேபோல் அவ்வப்போது வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகக் களியக்காவிளை சார்பு ஆய்வாளர் முத்துக்குமரன் தலைமையிலான போலீஸார் மடிச்சல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாகக் கார் ஒன்று வந்தது. போலீஸார் அதைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார். இதனைத் தொடர்ந்து போலீஸார் காரை பின் தொடர்ந்து விரைவாக தங்கள் ஜீப்பில் சென்றனர். அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அதங்கோடு என்னும் பகுதியில் சென்றபோது போலீஸார் காரை மடக்கினர். போலீஸார் நெருங்கி வருவதைப் பார்த்ததும் டிரைவர் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். இதனைத் தொடர்ந்து போலீஸார் காரை சோதனை செய்துபார்த்தபோது அதில் ஒரு டன் ரேசன் அரிசி இருந்தது.

இதனைத் தொடர்ந்து அரிசியோடு, காரைப் பறிமுதல் செய்த களியக்காவிளை போலீஸார் உணவுப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in