பாம்பன் கடலில் இரட்டைவலை மூலம் பிடித்த 2 டன் மீன் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

பாம்பன் கடலில் இரட்டைவலை மூலம் பிடித்த 2 டன் மீன் பறிமுதல்: அதிகாரிகள் அதிரடி

பாம்பன் கடலில் இரட்டை வலை மூலம் பிடித்த 2 டன் மீன்களை ரோந்து பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மன்னார் வளைகுடா கடலில் மண்டபம் இந்திய கடலோரக்காவல் படையினர், மீன்வளத்துறையினர், கடலோர அமலாக்க போலீஸார் நடுக்கடலில் நேற்றிரவு கூட்டு ரோந்து சென்றனர். அப்போது பாம்பன் கடலில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த விசைப்படகுகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை வலை மூலம் பிடித்த மீன்கள் இருப்பது தெரிந்தது.

இதுபோல் 4 ஜோடி விசைப்படகுகள் இரட்டை வலை மூலம் மீன்கள் பிடித்தது தெரிந்தது. 4 ஜோடி படகுகளில் இருந்த 2 டன் மீன்களை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக படகு உரிமையாளர்கள் பாம்பன் ஷிரின், ஜோஸ், மண்டபம் ஆஷிக் இக்பால், முஹமது அப்துல் காதர், தங்கச்சிமடம் ரோட்டியஸ், ராஜன், நாகேஷ், அந்தோணி பிச்சை ஆகியோரிடம் ரோந்து பணி கூட்டு நடவடிக்கை குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இப்படகுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு, படகுகளின் மானிய டீசல், மீன்பிடி அனுமதி ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள ராமநாதபுரம் மீன்வளத்துறை துணை இயக்குநருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 3 படகுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in