சுற்றி வளைத்த ராணுவம்...கெஞ்சிக்கேட்ட பெற்றோர்: சரணடைந்த 2 தீவிரவாதிகள்!

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்
புல்வாமாவில் பாதுகாப்பு படையினர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது இரண்டு தீவிரவாதிகள் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று ராணுவத்திடம் சரணடைந்தனர்.

இன்று காலை குல்காம் மாவட்டம் ஹடிகம் கிராமத்தில் இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து ஈடுபட்ட இந்த நடவடிக்கையின் போது பாதுகாப்பு படைகளால் இரண்டு தீவிரவாதிகள் சுற்றிவளைக்கப்பட்டனர். அதன்பின்னர் அதே கிராமத்தில் இருந்த அந்த தீவிரவாதிகளின் பெற்றோர் அழைத்து வரப்பட்டனர். அந்த பெற்றோர்கள் தங்கள் மகன்களை போலீஸாரிடம் சரணடையுமாறு கெஞ்சிக் கேட்டனர். இதன்பின்னர் மனம் மாறிய அந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர்.

சரணடைந்த தீவிரவாதிகளிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். உள்ளூர் இளைஞர்களான இவர்கள் இருவரும் சமீபத்தில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு மட்டும் ஜம்மு காஷ்மீரில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் உள்ளூரில் இருந்து தீவிரவாதிகளாக மாறியவர்கள் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in