அதிகாலையில் விடுதி 3-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை: ஆசிரியர்கள் இருவர் கைது

அதிகாலையில் விடுதி 3-வது மாடியில் இருந்து குதித்து பிளஸ் 2 மாணவி தற்கொலை:  ஆசிரியர்கள் இருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் படித்த மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலத்தில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள நெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் என்பவரது மகள் ஸ்ரீமதி(17). இவர் இந்த மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியின் 3-வது மாடியில் இருந்து ஸ்ரீமதி கீழே குதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீஸார், ஸ்ரீமதியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அப்பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர் வசந்த் என்பவரும், வேதியியல் ஆசிரியை ஹரிபிரியா என்பவரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வைத்து ஸ்ரீமதியைத் திட்டியதாகத் தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீமதியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக இருவரையும் சின்ன சேலம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in