இரண்டு வாரங்களாக இரண்டு வீரர்களைக் காணவில்லை: தீவிரமாகத் தேடும் இந்திய ராணுவம்

இரண்டு வாரங்களாக இரண்டு வீரர்களைக் காணவில்லை: தீவிரமாகத் தேடும் இந்திய ராணுவம்

அருணாசல பிரதேசத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தின் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காவலில் இருந்த இரண்டு ராணுவ வீரர்கள் மே 28-ம் தேதி முதல் காணவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அஞ்சாவ் மாவட்டத்தில் பணியில் இருந்த பிரகாஷ் சிங் மற்றும் ஹரேந்தர் சிங் ஆகியோர் தற்செயலாக அருகில் உள்ள ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரு வாரங்களாகத் தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், இரண்டு வீரர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராணுவம், விசாரணை நீதிமன்றத்தை கூட்டியுள்ளது. மேலும் இவர்கள் காணாமல் போனது குறித்து இரு ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டு, தற்போதைய நிலைமை குறித்து உடனுக்குடன் அவர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in