2 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: குற்றவாளிகள் மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்கள்!

ஹரியாணாவில் 2 முஸ்லிம் இளைஞர்கள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வாகனம்.
ஹரியாணாவில் 2 முஸ்லிம் இளைஞர்கள் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட வாகனம்.2 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிகள் மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்கள்!

ஹரியாணாவில் ராஜஸ்தானைச் சேர்ந்த 2 முஸ்லிம் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்களாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டத்தில் உள்ள காட்மீகா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நசீர்(25), ஜுனைத்(35). இவர்கள் இருவரும் ஹரியாணா மாநிலம் பிவானியில் ஜீப்பில் எரிந்த நிலையில் சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த பசு பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களும் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஜீப்பில் எரித்துக் கொல்லப்பட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

எரித்துக் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்
எரித்துக் கொலை செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்2 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளிகள் மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்கள்!

இந்த புகாரின் பேரில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் பசு பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஹரியாணாவின் நுஹ் மாவட்டத்தில் உள்ள பெரோஸ்பூரைச் சேர்ந்த ரிங்கு சைனி(32) கைது செய்யப்பட்டார். முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் எரித்துக் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக பெரோஸ்பூர் ஜிர்கா நிலையத்திற்கு ரிங்கு சைனி அழைத்துச் சென்றதாக ராஜஸ்தான் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்களாக செயல்பட்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பெரோஸ்பூர் மற்றும் நாகினா காவல் நிலையங்களில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் லோகேஷ் சிங்லா, ரிங்கு சைனி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூவரும் இன்பார்மர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று பேரும் ஜுனைத், நசீர் ஆகியோர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பசு பாதுகாப்பு படை என்ற பெயரில் 2 முஸ்லிம் இளைஞர்களைக் கொலை செய்தவர்களில் மூன்று பேர் போலீஸ் இன்பார்மர்கள் என்ற தகவல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in