2 முஸ்லிம் இளைஞர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

ஹரியாணாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட ஜீப்.
ஹரியாணாவில் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட ஜீப்.2 முஸ்லிம் இளைஞர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

பிவானியில் 2 முஸ்லிம் இளைஞர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதற்கு முன்பாக கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களை 17 மணி நேரமாக பசு பாதுகாப்பு படையினர் காயத்துடன் ஜீப்பில் வைத்து சுற்றியுள்ளனர் என்றும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எரித்துக் கொலை செய்யப்பட்ட  ஜுனைத், நசீர்
எரித்துக் கொலை செய்யப்பட்ட ஜுனைத், நசீர்2 முஸ்லிம் இளைஞர்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு: வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

கடந்த பிப்.15-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த ஜுனைத், நசீர் என்ற முஸ்லிம் இளைஞர்கள் காணாமல் போனார்கள். அவர்களைப் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த பசு பாதுகாப்பு படையினர் கடத்திச் சென்றதாக இருவரின் குடும்பத்தினரும் போலீஸில் புகார் செய்தனர். இதற்கு அடுத்த நாள் ஹரியாணாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள லோஹாரு அருகே ஜீப்பில் எரிந்த நிலையில் ஜுனைத், நசீர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இவர்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட கார் டிரைவர் ரிங்கு சைனி கைது செய்யப்பட்டார். மாடு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் ஜுனைத், நசீர் ஆகியோரை தானும், அவரது கூட்டாளிகளும் அழைத்துச் சென்று ஹரியாணா காவல்துறையிடம் ஒப்படைத்ததாக ரிங்கு சைனி ராஜஸ்தான் காவல்துறையின் விசாரணையின் போது கூறினார்.

ஆனால், ஜுனைத், நசீர் ஆகிய இருவரும் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டனர் என்றும், அதற்கு முன்பாக சுமார் 17 மணி நேரமாக காயங்களுடன் ஜீப்பில் வைத்து இரண்டு கண்காணிப்பு குழுக்களால் சுற்றப்பட்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நள்ளிரவு வரை அவர்கள் இருவரையும் பசு பாதுகாப்பு படையினர் ஜீப்பில் வைத்துச் சுற்றியுள்ளனர். இதன் பின் அந்த ஜீப்போடு அவர்கள் இருவரும் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த இரட்டைக்கொலையில் மேவாட், ஜிந்த் பிவானி கர்னால் ஆகிய இரண்டு குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, இதுபோன்ற கூடுதல் குழுக்களின் தொடர்பு குறித்து தாங்கள் ஆராய்ந்து வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நிரூபிக்கப்பட்ட ஒன்பது பேரைத் தவிர, குறைந்தது இன்னும் 12 பேர் இவ்வழக்கில் விசாரிக்கப்பட்டு வருவதாக ராஜஸ்தான் காவல்துறை கூறுகிறது. பசு பாதுகாப்பு படையினரால் இருவரையும் ஏற்றிச் செல்ல பயன்படுத்திய ஜீப் ஹரியானா மாநிலம் ஜிந்த் என்ற இடத்தில் உள்ள கௌஷாலாத்திற்குச் (பசு புகலிடம்) சொந்தமானதா என விசாரித்து வருவதாக பரத்பூர் ஐஜி கௌரவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். பசு பாதுகாப்பு படையால் இரண்டு முஸ்லிம்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in