`முன்னா’, `சோட்டு’ வாங்குபவர்களுக்கு இருப்பிடச் சான்று தேவையில்லையாம்: அமைச்சரின் புதிய அறிவிப்பு!

`முன்னா’, `சோட்டு’ வாங்குபவர்களுக்கு இருப்பிடச் சான்று தேவையில்லையாம்: அமைச்சரின் புதிய அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

புலம் பெயரும் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ காஸ் சிலிண்டர்கள் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. 2 கிலோ காஸ் சிலிண்டருக்கு 'முன்னா' எனவும், ஐந்து கிலோ காஸ் சிலிண்டருக்கு 'சோட்டு' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.

முதல் கட்டமாகச் சென்னை, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க கடைகளின் மூலம் இந்த காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த காஸ் சிலிண்டர்களை பெற இருப்பிடச் சான்று, முன்பணம் தேவையில்லை. ஆனால் ஏதாவது ஒரு அடையாள அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று அறிமுகப்படுத்துகிறார்.

2 கிலோ முன்னா சிலிண்டரை பெற 958 ரூபாயும், 5 கிலோ சோட்டா சிலிண்டரைப் பெற 1,515 ரூபாயும் செலுத்த வேண்டும். இந்த தொகை முதல்முறை சிலிண்டரைப் பெறுபவர்களுக்கு மட்டும்தான். அதன் பிறகு சிலிண்டர் தீர்ந்துவிட்டால், அதற்கான தொகையை மட்டும் செலுத்தினால் போதும். தற்போதைய சிலிண்டர் விலை நிலவரப்படி 2 கிலோ முன்னா காஸ் 250 ரூபாய் எனவும், 5 கிலோ சோட்டா 575.50 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரிய சிலிண்டர்களைப் போல இந்த விலையும் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in