2 சிறுமிகள் பலாத்காரம்
2 சிறுமிகள் பலாத்காரம்

வைரலாகும் அதிர்ச்சி வீடியோ ... ஆடு மேய்க்கச் சென்ற 2 சிறுமிகளைப் பலாத்காரம் செய்யும் கும்பல்!

காட்டில் ஆடு மேய்க்கச் சென்ற இரண்டு சிறுமிகளைக் கும்பல் பலாத்காரம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ள ஹனுமானா காவல் நிலையத்திற்குட்பட்ட காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்க 14, 16 வயது சிறுமிகள் சென்றுள்ளனர். அவர்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்துள்ளது. கடந்த 25 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் 2 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை போலீஸார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விஷயத்தை வெளியே சொன்னால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினோம். அதனால் அவர்கள் பயந்து கொண்டு இந்த விஷயத்தை வெளியே சொல்லவில்லை என்றனர். ஆனால், வீடியோ வெளியானதால், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் போலீஸாருக்குத் தற்போது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினருடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமிகளைப் பலாத்காரம் செய்த கும்பலைச் சேர்ந்த மேலும் இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சிறுமிகளைப் பலாத்காரம் செய்த ஏழு பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் இருவர் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in