பெட்ரோல் பங்குகள் 2 நாள் வேலை நிறுத்தம்... பெட்ரோல், டீசல் கிடைக்காது மாநிலமெங்கும் கடும் அவதி

ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்

ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்கக் கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் எரிபொருள் கிடைக்காது வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பெட்ரோல் மீதான வாட் வரி மிக அதிகமாக உள்ளது. கடந்த கொரோனா காலகட்டத்தின் போது ராஜஸ்தானில் வாட் வரி மேலும் உயர்த்தப்பட்டு இருந்தது. இதன் காரணமாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தொடர்ந்து வருமான இழப்பை சந்தித்து வருகின்றனர். மாநிலத்தில் மொத்தம் உள்ள 33 சதவீத பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தொழில் நசிவை சந்தித்துள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்
அயிரத்திற்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் மூடல்

காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது அதிகரிக்கப்பட்ட வாட் வரியை பாஜக ஆட்சிக்கு வந்தால் குறைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்து இருந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும் இதுவரை வாட் வரி குறைக்கப்படவில்லை. இதையடுத்து இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ராஜஸ்தான் மாநில பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

பெட்ரோல் பங்க் போராட்டத்தால் எரிபொருள் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி
பெட்ரோல் பங்க் போராட்டத்தால் எரிபொருள் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி

இதன்படி இன்று காலை 6 மணி முதல், அடுத்த 48 மணி நேரத்திற்கு இந்த வேலை நிறுத்த போராட்டமானது துவங்கியது. இதன் காரணமாக மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு இருப்பதால் பெட்ரோல், டீசல், எரிவாயு கிடைக்காமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in