டூவீலரில் சென்ற இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி: பாஜகவினர் இருவர் கைது

டூவீலரில் சென்ற இளம்பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயற்சி: பாஜகவினர் இருவர் கைது

டூவீலரில் சென்ற பெண்ணை காரில் கடத்தி கட்டாய திருமணம் செய்ய முயன்றவரும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கரியாம்பாளையம் மசக்கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான 27 வயது பெண்ணை ஒரு தலையாய் காதலித்து வந்துள்ளார். அத்துடன் அந்த பெண்ணிடம் சில நாட்களுக்கு முன்பு தனது காதலை அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அவர் தனது பெற்றோரிடம் வந்து பெண் கேட்கச் சொல்லியுள்ளார். ஆனால், அவரது பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் டூவீலரில் அந்த பெண் நேற்று சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சண்முகசுந்தரம் இளம்பெண்ணை மறித்து வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றுள்ளார். அத்துடன் பொன்னேகவுண்டன் புதூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு கடத்திச் சென்றுஅ கட்டாய திருமணம் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், அவரிடமிருந்து தப்பிய இளம்பெண், நடந்த சம்பவத்தை அன்னூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சண்முகசுந்தரத்தை கைது செய்து போலீஸார், இதற்கு உடந்தையாக இருந்த கெம்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார்(43) என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in