1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தொகுத்தறிவு தேர்வு நடத்த உத்தரவு!

1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தொகுத்தறிவு தேர்வு நடத்த உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் தொகுத்தறிவு தேர்வு நடத்த தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம், மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்ககம் இணைந்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், `எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது, கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை (Summative Assessment) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படவேண்டும். 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு (CD) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17-ம் தேதி அன்று நடைபெறவுள்ள ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும்.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வை நடத்த அறிவுறுத்தப்படுகிறது. எனவே இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022-க்குள் நடத்தி முடிக்கும் படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in