பதக்கம் மேல் பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

பதக்கம் மேல் பதக்கம் குவிக்கும் பளுதூக்குதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்!

காமன் வெல்த் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜெரிமி லால்ரினங்கா தங்கம் வென்றுள்ளார்

இன்று நடைபெற்ற பளுதூக்குதலின் 67 கிலோ எடைப்பிரிவு போட்டியில் மொத்தமாக 300 கிலோ எடையைத் தூக்கி 19 வயது மட்டுமே ஆன ஜெரிமி தங்கப்பதக்கத்தை வென்றார். ஸ்னாட்ச் முறையில் 140 கிலோ மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க்கில் 160 கிலோ என மொத்தம் 300 கிலோ எடையைத் தூக்கி காமன்வெல்த் போட்டிகளில் புதிய சாதனையை ஜெரிமி படைத்தார். காமன் வெல்த் தொடரில் இந்தியா வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும்.

ஏற்கனவே நேற்றைய காமன்வெல்த் போட்டிகளில் பளு தூக்குதலின் பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கமும், பளுதூக்குதல் 55 கிலோ எடைப்பிரிவில் பிந்தியா ராணி வெள்ளிப்பதக்கமும் வென்றனர். ஆடவர் 55 கிலோ எடைப் பிரிவினருக்கான பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 61 கிலோ பிரிவில் இந்திய வீரர் குருராஜா வெண்கலத்தையும் கைப்பற்றினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in