18 வயது மாணவருக்கு மாரடைப்பு: கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து பரிதாப மரணம்

18 வயது மாணவருக்கு மாரடைப்பு
18 வயது மாணவருக்கு மாரடைப்பு18 வயது மாணவருக்கு மாரடைப்பு: கபடி விளையாடியபோது மயங்கி விழுந்து பரிதாப மரணம்

கர்நாடகாவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 18 வயதே ஆன பார்மஸி மாணவர் மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

கர்நாடகாவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள மடகசிரா பகுதியைச் சேர்ந்த தனுஜ் குமார் நாயக் என்பவர், பாலாஜி மருந்தியல் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவராக உள்ளார், அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கபடிப் போட்டியில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார்.

இந்த முழு சம்பவமும் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது, அந்த வீடியோவில், கபடிப் போட்டியில் நாயக் மற்றும் அவரது குழுவினர்கள் ஒன்றாக நிற்பதைக் காணலாம், எதிர் அணியைச் சேர்ந்த வீரர் இவர்கள் மீது ரெய்டு செய்யும் போது, ​​திடீரென நாயக் பின்னால் சரிந்து விழுந்தார்.

அவர்கள் உடனடியாக அந்த மாணவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அங்குள்ள ஊழியர்கள் அவரை பெங்களூருக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள், ஏனெனில் அவரால் தானாக மூச்சுவிட முடியவில்லை. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவர் கொண்டு செல்லப்பட்டார். இரண்டு நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் செவ்வாய்கிழமை மாரடைப்பால் இறந்தார், அவர் கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என்று தனுஜின் சகோதரர் மூலம் கல்லூரி நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in