
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே குண்ட்லா போச்சம்பள்ளி நகராட்சி எல்லையில் அமைந்துள்ள சிஎம்ஆர் பொறியியல் கல்லூரியில் 18 வயதே ஆன முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
சச்சின் எனும் அந்த மாணவன் கல்லூரி வளாகத்தில் உள்ள நடைபாதையில் நடந்து சென்றபோது திடீரென சரிந்து விழுந்தார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மாணவனை உடனடியாக சிஎம்ஆர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேற்று மதியம் சச்சின் தனது நண்பர்களுடன் கல்லூரியில் நடந்து சென்றபோது திடீரென சரிந்து விழுந்தார். சம்பவத்திற்கு முன்னர் அவர் வகுப்புகளில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாரடைப்பால் இறந்தார் என்று மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம் சுசித்ராவில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கல்லூரி அதிகாரிகள் அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.