சீனாவில் தங்கச் சுரங்கம் சரிந்தது: சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

சீனாவில் தங்கச் சுரங்கம் சரிந்தது: சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

வடமேற்கு சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உள்ள தங்கச் சுரங்கம் சரிந்தது. இந்த இடுபாடுகளில் சிக்கிய 18 பேரை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜகஸ்தானின் எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் யினிங் கவுண்டியில் உள்ள இந்த சுரங்கத்தில் சனிக்கிழமை மாலை மொத்தம் 40 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர், அப்போது சுரங்கம் சரிந்து விழுந்தது. இதில் சிக்கிய இருபத்தி இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் மேற்பரப்புக்கு கொண்டு வரப்பட்டனர், ஆனால் 18 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

சமீபத்திய காலங்களில் சுரங்கப் பாதுகாப்பு என்பது பெருமளவில் மேம்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் விபத்துகள் இன்னும் அடிக்கடி நிகழ்கின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பரில், வடமேற்கு மாகாணமான கிங்காயில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 19 சுரங்கத் தொழிலாளர்கள் நீண்ட தேடுதலுக்குப் பிறகு இறந்து கிடந்தனர். டிசம்பர் 2021-ல், வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் இருந்து 20 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர், அதில் இருவர் உயிரிழந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in