மகனின் விபரீத செயலால் சிறைக்கு சென்ற தந்தை: ஆசையை நிறைவேற்றியதால் வந்த சோதனை

மகனின் விபரீத செயலால் சிறைக்கு சென்ற தந்தை: ஆசையை நிறைவேற்றியதால் வந்த சோதனை

மகனின் விபரீத செயலால் அவரது ஆசையை நிறைவேற்றிய தந்தை சிறைக்கு சென்ற சம்பவம் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் அதேப் பகுதியில் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவரது மகன் சரவணன் (17) மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். ஏழ்மையான சூழலிலும் தனது மகன் கல்லூரிக்கு சென்று வர விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார். இந்த நிலையில் தியாகராய நகரில் உள்ள பிரபல தனியார் உணவகம் அருகே, இளைஞர் ஒருவர் வீலிங் சாகசத்தில் ஈடுபடுவதாக, சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ, போக்குவரத்து காவல்துறை உயரதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 70 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் மதுரவாயல் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் 17 வயது மாணவர் சரவணன் என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக அவரது தந்தை மெக்கானிக் கோபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

ஆசையாக வாங்கி கொடுத்த வாகனத்தை சரிவர பயன்படுத்தாததால் கைது நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் மெக்கானிக் கோபால்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in