
5 மாதங்களில் 52 நாடுகளை விமானத்தில் கடந்து சாதனை படைத்து அசத்தியுள்ளான் 17 வயது சிறுவன்.
கிராமம் முதல் நகரம் வரை இருக்கும் சிறுவர், சிறுமிகள் ஏதாவது ஒரு வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அவர்கள் வெளியே தெரிவதில்லை என்ற நிலை சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. தற்போது, அவர்கள் செய்யும் சின்ன சின்ன காரியங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது. சிறு குழந்தைகள் கூட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் 17 வயது சிறுவன் 5 மாதங்களில் 52 நாடுகளை விமானத்தில் கடந்து சாதனை படைத்துள்ளான். பல்கேரியா நாட்டின் சோபியா நகரைச் சேர்ந்த மெக் ரூதர்போர்டு என்ற சிறுவன் தனியே உலகத்தை சுற்றி வந்துள்ளார். சோபியா விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிய சிறுவனை ஏராளமானோர் வரவேற்றனர். மார்ச் 23-ம் தேதி சோபியாவில் இருந்து புறப்பட்ட சிறுவன், 52 நாடுகளில் பறந்து கிட்டத்தட்ட 250 மணி நேரம் பயணம் செய்த பின்னர் நேற்று தனது விமானத்தை பல்கேரிய தலைநகரில் தரையிறக்கினார்.
"நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன். இது மிகவும் உற்சாகமான, சுவாரசியமான பயணம். பயணத்தின் போது பல தடைகள் இருந்தன. ஆனால் நான் ஒருபோதும் கைவிடவில்லை. தனது சாதனை தன்னைப்போன்று சிறுவர்கள் சாதிப்பதற்கான ஊக்கமாக அமையும்" என்று சிறுவன் மெக் ரூதர்போர்டு கூறியுள்ளார்.