பிரபல கட்டுமான நிறுவனத்தில் 165 கோடி பணம், 14 கிலோ தங்கம் சிக்கியது: முடிவுக்கு வந்தது ஐடி ரெய்டு

பிரபல கட்டுமான நிறுவனத்தில் 165 கோடி பணம், 14 கிலோ தங்கம் சிக்கியது: முடிவுக்கு வந்தது ஐடி ரெய்டு

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவனத்தில் 4 நாட்களாக நடந்து வந்த வருமானவரி சோதனையில் 165 கோடி பணம், 14 கிலோ தங்கம், 200 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் ஜெயபாரத், கிளாட்வே சிட்டி அன்னை பாரத், கட்டுமான நிறுவனம் உள்ளது. இதில், பாலு கொத்தனார் என்பவரின் மகன்கள் அழகர், ஜெயக்குமார், முருகன், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் இந்த நிறுவனங்களின் பங்குதாரராக உள்ளனர்.

இந்நிலையில் கட்டுமான நிறுவனத்தில் வரி ஏய்ப்பு மற்றும் அளவுக்கு அதிகமான சொத்துகள் வாங்கப்பட்டுள்ளதாக வந்த ரகசிய தகவலின் பெயரில் சுங்கவரித் துறையினர் டெல்லி, ஹைதராபாத், சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 36 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி அதிகாலை 7 மணிக்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடு மட்டும் அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ஒருநாள் முழுவதும் அதிரடியில் சோதனையில் ஈடுபட்ட சுங்கவரித்துறையினர் கடந்த 21-ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் கிளாட்வே சிட்டியில் உள்ள பங்குதாரரின் ஒருவரான முருகன் என்பவரின் வீட்டில் இருந்து 75 கோடி பணம், 3 கிலோ தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளி, 93 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து 22-ம் தேதி காலை 11 மணியளவில் மற்றொரு பங்குதாரரான செந்தில்குமார் என்பவரது வீட்டில் 2 கிலோ 700 கிராம் தங்கம், 1 கோடியே 96 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி (இன்று) அதிரடி சோதனையில் ஈடுபட்ட வருமானவரித்துறையினர் சரவணகுமார் என்பவர் வீட்டில் இருந்து மூன்றரை கிலோ தங்கம், பல கோடி மதிப்பிலான பணம், வைரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இன்று மதியத்திற்கு மேல் அழகர் வீட்டில் பணம் 90 கோடி ரூபாய்க்கும், 130 கோடிக்கு செத்து மதிப்புள்ள ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ஜெயகுமாரின் மதுரை கோச்சடை வீட்டில் நடைபெற்ற சோதனையில் 4 கிலோ தங்கம், பணம் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

நான்கு நாட்கள் நடைபெற்ற வருமானவரித் துறையினர் சோதனையில் ஜெயபாரத் குழும நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடு மட்டும் அலுவலகங்களில் இருந்து தங்கம் 14 கிலோவும், பணம் 165 கோடியும், 200 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு சோதனை நிறைவடைந்தது. வருமானவரித் துறையினர் கைப்பற்ற பணம் மற்றும் நகைகளின் முழு மதிப்பீடு விவரங்கள் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரையில் பிரபல கட்டுமான நிறுவன அதிபர்களின் வீட்டிலிருந்து கோடிக்கணக்கான பணம் நகை மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in