விபத்து
விபத்து

பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து...பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

இமாசல பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் இன்று காலை பேருந்து ஒன்று ஜங்லா கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உட்பட 16 பயணிகள் உயிரிழந்தனர். குலுவில் இருந்து சைன்ஜ் என்ற இடத்திற்கு பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.

இந்த விபத்து குறித்து பேசிய குலு மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அசுதோஷ் கர்க், "குலுவில் இருந்து சைஞ்ச் நோக்கிச் சென்ற பேருந்து காலை 8.30 மணியளவில் ஜங்லா கிராமத்தின் அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்தது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்" என கூறினார்.

விபத்து நடந்தபோது பேருந்தில் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in