பள்ளத்தாக்கில் விழுந்த வாகனம்; 16 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: வளைவில் திரும்பியபோது சோகம்

பள்ளத்தாக்கில் விழுந்த வாகனம்; 16 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: வளைவில் திரும்பியபோது சோகம்

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வடக்கு சிக்கிமில் உள்ள சாட்டன் எந்த இடத்தில் இருந்து தாங்கு என்ற இடத்திற்கு மூன்று வாகனங்களில் ராணுவ வீரர்கள் இன்று வந்து கொண்டிருந்தனர். சீமா என்ற பகுதியில் இருந்த வளைவில் ராணுவ வாகனம் செல்ல முற்பட்டது. அப்போது வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 16 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். நான்கு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து ஏர் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இந்த விபத்து குறித்து ராணுவம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, சாட்டன் என்ற இடத்திலிருந்து தாங்கு பகுதிக்கு சென்ற போது பள்ளத்தாக்கில் வாகன விழுந்து விபத்துக்குள்ளானதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்த சம்பவம் இந்திய மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in