பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்... ஐ.டி துறையினருக்கு வொர்க் ஃப்ர்ம் ஹோம்?

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியும் வொர்க் ஃப்ரம் ஹோம் சலுகைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்
பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நாளுக்கு நாள் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்களும், பணிக்கு செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தங்களது அன்றாட பணிகளை செய்ய முடிவதில்லை என வேதனை தெரிவிக்கும் இல்லத்தரசிகள், அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தண்ணீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மக்களின் அன்றாட அவசியமான தண்ணீர் இல்லாததால் பெங்களுரு வாசிகளே பெரும் சிக்கலில் உள்ளனர். வீடுகளை போன்று, அலுவலகங்களிலும் தண்ணீர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. இதற்கு தற்காலிக தீர்வாக, ஐ.டி (IT) துறை நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வொர்க் ஃப்ரம் ஹோம் வசதியை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்
அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்

இதன் எதிரொலியாக ஏற்கெனவே பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோம் உள்ளிட்ட சலுகைகளை அளித்துள்ளது. அதாவது பெங்களூருவைச் சேர்ந்தவர்கள் அவர்களது வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்றும், பெங்களூரு இல்லாத வெளியூர்வாசிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வொர்க் ஃப்ரம் ஹோம் பணியை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசின் தகவல்படி, பெங்களூருவில் நாள்தோறும் 2,600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் சுமார் 500 மில்லியன் லிட்டர் குறைபாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் ஐ.டி துறையில் பணிபுரியும் சுமார் 15 லட்ச மக்களை வீட்டில் இருந்த படி வேலை பார்க்க வைத்தாலும், அல்லது அவர்களது சொந்த ஊருக்கு செல்ல அனுமதித்தாலும், சுமார் 10 லட்சம் மக்கள் ஊரை விட்டு வெளியேற வாய்ப்பு உள்ளது.

இதனால் தண்ணீர் தேவை அதிகரிக்காது என்பதால், 500 மில்லியன் லிட்டர் குறைபாடு என்பது இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது என நீதிபதி ஸ்ரீதர் ராவ் கருத்து தெரிவித்திருந்தார். எனவே முடிந்தளவு அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வீட்டில் இருந்த படி பணி செய்ய அறிவுறுத்தலாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in