
சூடானில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்த நான்கு பெண்களிடம் இருந்து 15 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சூடானிலிருந்து 23 பெண்கள் நேற்று ஹைதராபாத்துக்கு விமான மூலம் வந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 23 பெண்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில், 4 பெண்கள் தங்கள் ஷூ மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து தங்கத்தை கொண்டு வந்ததைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அவர்களிடமிருந்து 14.415 கிலோ எடையுள்ள 22 கேரட் தங்கமும் மற்றும் 491 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தின் மதிப்பு 8 கோடி என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து, 4 பெண்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.