துணியில் மறைத்து ரூ. 74.90 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம்
தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம்துணியில் மறைத்து ரூ. 74.90 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தல்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.74.90 மதிப்பிலான 1460 கிராம் தங்கம், ரூ.40. 60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி உட்பட ரூ.1.15 கோடி மதிப்பிலான பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி, துபாயில் இருந்து சென்னை வந்த ஆண் பயணி ஒருவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர் துணியில் மறைத்து எடுத்துவந்த ரூ.74.90 லட்சம் மதிப்பிலான 1460 கிராம் 24 கேரட் சுத்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு பணம் கொண்டு வருவதாக சென்னை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை அடுத்து, பயணிகளிடம் சோதனை செய்தததில், துணியில் சுற்றிக் கொண்டு வரப்பட்ட ரூ.40.60 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் கைப்பற்றப் பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in