14,576 பேர் கைது; 13,52,49,711 ரூபாய் மதிப்புள்ள அரிசி பறிமுதல்: ஒன்றரை ஆண்டில் அதிகாரிகள் அதிரடி

14,576 பேர் கைது; 13,52,49,711 ரூபாய் மதிப்புள்ள அரிசி பறிமுதல்: ஒன்றரை ஆண்டில் அதிகாரிகள் அதிரடி

கடந்த ஒன்றரை ஆண்டில் பொது விநியோக திட்ட பொருட்களை கடத்தியதாக 14,576 நபர்கள் கைது செய்யப்பட்டு, 13,52,49,711 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 07.05.2021 முதல் 29.12.2022 வரையிலான காலக்கட்டத்தில் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்கள் கடத்தியதாக மொத்தம் 14,514 வழக்குகள் குடிமை வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினால் பதிவு செய்யப்பட்டு, 1,03,056 குவிண்டால் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் 32,300 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 1969 சிலிண்டர்களும், 6,27,400 லிட்டர் கலப்பட டீசலும், இன்றியமையாத கோதுமை, துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுகளில் 13,52,49,711 ரூபாய் மதிப்பிலான பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு தொடர்புடைய 14,576 நபர்கால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை, கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 3038 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டத்தின் கீழ் 134 நபர்கள் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர் என்றும் இதே போல 11.10.2019 முதல் 06.05.2021 காலக்கட்டத்தில் 9,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 51,738 குவிண்டால் அரிசி மற்றும் 21,343 லிட்டர் மண்ணெண்ணெய், 818 சிலிண்டர், 191902 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு 6,76,32,338 ரூபாய் எனவும் இந்த வழக்குகளில் தொடர்புடைய 8,957 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்திய 1,779 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 68 நபர்கள் தடுப்பு காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் பொது விநியோக திட்ட அரிசி மற்றும் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி சென்றடைய முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறோம் என்றும் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in