போதைப்பொருளுக்கு போட்ட தூண்டில்: 8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்கநகைகள் சிக்கியது

பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்.போதைப்பொருளுக்கு போட்ட தூண்டில்: 8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்கநகைகள் சிக்கியது

பேருந்தில் உரிய ஆவணங்களின் கொண்டு வந்த 8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சேலம் நகைக்கடை ஊழியர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோதனைபோடும் அதிகாரிகள்.
சோதனைபோடும் அதிகாரிகள்.போதைப்பொருளுக்கு போட்ட தூண்டில்: 8 கோடி மதிப்புள்ள 14.5 கிலோ தங்கநகைகள் சிக்கியது

ஆந்திராவிலிருந்து கும்மிடிப்பூண்டி வழியாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகளவில் கடத்தப்படுவதாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி எலாவூர் அருகே போலீஸார் பாதுகாப்பு பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பயணிகள் இருவர் கொண்டு வந்த 3 பெரிய பைகளில் வளையல், கம்மல், நெக்லஸ் என தங்கநகைகள் குவியல் குவியலாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். அப்போது அவர்களிடம் ஆவணங்கள் இல்லாததால் 3 பைகளில் இருந்த மொத்த நகைகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் வியாசர்பாடியில் உள்ள போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் காளிமுத்து என்பதும், இவர்கள் சேலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் ஜுவல்லரி கடையில் விற்பனை பிரிவில் ஊழியர்களாக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் இவர்கள் சேலத்திலிருந்து 14.5கிலோ தங்க நகைகளை விசாகபட்டினத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு கொண்டு சென்று காண்பித்து ஆர்டரை பெற்றுக்கொண்டு, மீண்டும் நகைகளுடன் சேலத்திற்கு பேருந்தில் சென்றுள்ளனர்.

அப்போது போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸில் சிக்கியது தெரியவந்தது. பின்னர் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 8 கோடி மதிப்பிலான 14.5 கிலோ தங்கநகைகளை போலீஸார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் பிடிபட்ட நகைக்கடை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in