140 சிறைக்கைதிகளுக்கு எச்ஐவி; பரிசோதனையில் பதறிய மருத்துவர்கள்: நடந்தது என்ன?

140 சிறைக்கைதிகளுக்கு எச்ஐவி; பரிசோதனையில் பதறிய மருத்துவர்கள்: நடந்தது என்ன?

கிழக்கு டெல்லியில் தஸ்னா சிறையில் உள்ள 140 கைதிகளுக்கு எச்ஐவி தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் சிறைத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தின் அண்டை மாவட்டமான கிழக்கு டெல்லியில் தஸ்னா சிறை உள்ளது. இச்சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 5500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாநில காவல் துறை மற்றும் சிறைத்துறை சார்பில் கைதிகளுக்கு மருத்துவப்பரிசோதனை முகாம் நடைபெற்றது. அப்போது காய்ச்சல், காசநோய், எச்ஐவி, சர்க்கரை உள்ளிட்ட நோய்கள் குறித்து கைதிகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது சிறையில் உள்ள , 140 கைதிகளுக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் , 35 கைதிகளுக்கு காசநோய் பாதிப்பும் இருந்தது இந்த மருத்துவப்பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையறிந்த மருத்துவர்களும், சிறைத்துறை அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள கைதிகளுக்கு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in