சிஏஏ சட்டத்தின் கீழ் 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்... வழங்கியது மத்திய அரசு!

குடியுரிமை சான்றிதழை ஒரு பெண்ணுக்கு வழங்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா
குடியுரிமை சான்றிதழை ஒரு பெண்ணுக்கு வழங்கும் மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா

குடியுரிமை திருத்த சட்டத்தின் (சிஏஏ) கீழ் முதல் தொகுப்பில் 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அரசு இன்று வழங்கியது.

சிஏஏ சட்டத்தின் கீழ் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து மத அடிப்படையில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, கடந்த 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியர், ஜெயின், பார்சி, பவுத்தம் மற்றும் கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினர் இந்தியாவில் குடியுரிமை பெறலாம்.

குடியுரிமை சான்றிதழ் வழங்கல்
குடியுரிமை சான்றிதழ் வழங்கல்

சிஏஏ சட்டம் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும் சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து, கடந்த மார்ச் 11ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பான அரசாணையை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தகுதியுடையவர்களிடமிருந்து குடியுரிமை சான்றிதழுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் தொகுப்பாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவற்றை, மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா பயனாளிகளுக்கு வழங்கினார்.

குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டம் (கோப்பு படம்)
குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டம் (கோப்பு படம்)

சிஏஏ சட்டம் இந்தியா முழுவதும் தீவிர விவாதம், பரவலான எதிர்ப்புகள், போராட்டங்களுக்கு வித்திட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், "மத்தியில் இந்தியக் கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரில் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்” என கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in