பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற வழக்கு... மேலும் 14 பேர் அடையாளம் தெரிந்தது!

பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற வழக்கு... மேலும் 14 பேர் அடையாளம் தெரிந்தது!

மணிப்பூரில் 2 பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கும்பலில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 14 பேர் வீடியோ மூலம் அடையாளம் கண்டுள்ளது போலீஸ்.

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் 53 சதவீதம் பேரும், நாகா மற்றும் குகி சமூகத்தை சேர்ந்தவர்கள் 40 சதவீதம் பேரும் உள்ளனர். இவர்களில் குகி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கிடைத்துள்ளது. அதே போன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

இதனிடையே, மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக்கூடாது என்று குகி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 2 சமூகத்தினர் இடையே கடந்த மே 3ம் தேதி மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக வெடித்தது.

இதனிடையே, 70 நாட்களுக்கு பிறகு பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக கும்பல் ஒன்று ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கடந்த 19ம் தேதி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், வீடியோ மூலம் கும்பலில் இருந்த மேலும் 14 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற வழக்கில் அடுத்தடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருவது சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in