ஆலோசனை மையம் மூலம் ஓர் ஆண்டில் 134 வழக்குகளுக்குத் தீர்வு: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

ஆலோசனை மையம்  மூலம் ஓர் ஆண்டில் 134 வழக்குகளுக்குத் தீர்வு: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை காவல்துறையால் நிர்பயா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. துவங்கிய ஓராண்டில் மட்டும் இந்த ஆலோசனை மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான 508 வழக்குகள் கையாளப்பட்டது. அதில் 8 சதவீதம் ஆண்களுக்கும், 92 சதவீதம் பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனை மையத்தின் ஓராண்டு நிறைவு நிகழ்ச்சி சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால், திரைப்பட நடிகை சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதிதாக கட்டப்பட்டுள்ள ஆலோசனை மைய கட்டிடத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து நடிகை சாய்பல்லவி பேசுகையில்," பெண்களின் பிரச்சினைக்காக ஹெல்ப்லைன் எண் இயங்கி வருகிறது. , கிண்டலுக்காக இந்த நம்பரை யாரும் பயன்படுத்த வேண்டாம் .இந்த ஆலோசனை மையம் மூலமாக இன்னும் நிறைய பெண்களின் வாழ்க்கையை காப்பாற்றபட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.

பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் பேசுசுகையில், " தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற 20 நாட்களில் பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம் பெற வேண்டும் என்று கூறினார். அதன்படி நிர்பயா ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. 181 பெண்கள் உதவி எண்ணிற்கு ஒரு நாளைக்கு மட்டும் 500 அழைப்புகள் வருகிறது. அதில் கவுன்சிலிங், சட்ட உதவிகள், கேட்பதுடன், சிலர் நக்கலடிப்பற்காக தொடர்பு கொள்கின்றனர்" என்றார்.

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசுகையில், " ஆலோசனை மையத்தில் ஒரு ஆண்டில் மட்டும் 500 வழக்குகள் கையாளப்பட்டது, அதில் 134 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in