ஒரே நாளில் 133 ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை: அதிரடி தொடரும் என்று அறிவிப்பு

ஒரே நாளில் 133 ரவுடிகளை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறை: அதிரடி தொடரும் என்று அறிவிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் காவல் துறை நடத்திய ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், 'ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை' என்ற ஆபரேஷனை தமிழக போலீஸார் நடத்தி வருவதாக தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட ''மின்னல் ரவுடி வேட்டை' ஆபரேஷன்' மூலம் தமிழகத்தில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது..

குறிப்பாக கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 15 பேர் இந்த ஆபரேஷனில் சிக்கி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகளில் குற்றவாளிகளான 13 ஏ+ ரவுடிகளும் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்து பிடிபட்ட மீதமுள்ள 105 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தமிழக காவல்துறையால் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in