
தமிழகத்தில் இன்று நடைபெற்ற குரூப்-1 முதல்நிலை தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை.
தமிழகத்தில் குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜூலை 21-ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதன்படி சென்னை, மதுரை,கோவை, திருச்சி உட்பட தமிழகம் முழுவதும் 38 மையங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. குரூப் - 1 தேர்வை எழுத 3,22,414 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 1,90,957 பேர் மட்டுமே இன்று தேர்வு எழுதினர். 1,31,457 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதன்படி 59 சதவீதம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 40 சதவீத பேர் தேர்வை எழுதவில்லை.