விளையாடிவிட்டு வீடு திரும்பிய சிறுவன்; புதரில் மறைந்திருந்த சிறுத்தை - நொடிப்பொழுதில் நேர்ந்த விபரீதம்

சிறுத்தை- மாதிரிப் படம்
சிறுத்தை- மாதிரிப் படம்

உத்தராகாண்ட் மாநிலம் தெஹ்ரி மாவட்டத்தில் 13 வயதுடைய சிறுவன் சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

கன்சாலி பகுதியில் 13 வயது சிறுவன் அர்னவ் சந்த் தனது நண்பர்களுடன் விளையாடிவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது, சிறுத்தை அச்சிறுவனை தாக்கி அருகில் உள்ள காட்டிற்கு இழுத்து சென்றது. சிறுவன் சென்ற சாலையின் இருபுறமும் அடர்ந்த புதர்கள் உள்ளன, அதன் பின்னால் சிறுத்தை மறைந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

வனப் பணியாளர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி, திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் சிறுவனின் வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள காட்டில் இருந்து அச்சிறுவனின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கிராம மக்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவுகிறது. வனப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டு, சிறுத்தையை பிடிக்க ரோந்துக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று வனத்துறை அதிகாரி பிரதீப் சௌகான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in