சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு பறந்த 13 டிராக்டர்கள்: மணல் கொள்ளையர்களின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்

சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு பறந்த 13 டிராக்டர்கள்: மணல் கொள்ளையர்களின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சுங்கச்சாவடித் தடுப்புகளை உடைத்துக் கொண்டு 13 டிராக்டர்களில் மணல் கொள்ளைக்கும்பல் தப்பிக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு ஒரு டிராக்டர் வந்தது. அதில் மணல் நிரப்பப்பட்டிருந்தது. அதனால் சுங்கச்சாவடி ஊழியர் அந்த வாகனத்தை நிறுத்த முயன்றார்.

ஆனால், தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு அந்த டிராக்டர் தப்பிச் சென்றது. சுமார் 50 வினாடிக்குள் அடுத்தடுத்து 12 டிராக்டர்கள் அந்த சுங்கச்சாவடியை அதிவேகத்தில் கடந்து சென்றன. அப்போது சுங்கச்சாவடி ஊழியர்களை டிராக்டரில் இருந்தவர்கள் தாக்க முயன்றனர். இந்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இந்த டிராக்டர்கள் ஆக்ராவிலிருந்து குவாலியருக்கு திரும்பிக் கொண்டிருந்ததாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர். ராஜஸ்தான் - உத்தரபிரதேச எல்லையில் உள்ள சம்பல் பகுதியில், சட்டவிரோதமாக மணல் அள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சுங்கச்சாவடியை உடைத்துக் கொண்டு தப்பியவர்கள் உள்ளூர் மணல் கடத்தல் கும்பல் என போலீஸாருக்குத் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in