13 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை!

மழை
மழை

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஹாமூன் புயல் வலுவிழந்து கரையைக் கடந்த நிலையில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழை
மழை

கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையத் தகவல் வெளியிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in