திரிபுராவிலிருந்து ரயிலில் வந்த கஞ்சா; சென்னையில் விற்பனை: சிக்கிய வடமாநில இளைஞர்கள்

திரிபுராவிலிருந்து ரயிலில் வந்த கஞ்சா; சென்னையில் விற்பனை: சிக்கிய வடமாநில இளைஞர்கள்

சென்னை அடுத்த தாம்பரம் கடப்பேரி, திருநீர்மலை சாலையில் கடந்த 3 வருடங்களாக திரிபுராவை சேர்ந்த சல்மான் உசேன்(24), என்பவர் தங்கி, பல்லாவரம் ரேடியல் சாலையில், கட்டுமான நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கஞ்சா விற்பனை செய்வதை அறிந்த பள்ளிக்கரணை மது விலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அவரை பிடித்து விசாரணை செய்ததில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டார்.

மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சாவை ரயிலில் கடத்தி வந்த அவரது நண்பர்களான திரிபுராவை சேர்ந்த ஆலம்கிர் உசேன்(22), பிலால் மியா(23), ஆகிய இருவரையும் 12 கிலோ கஞ்சாவுடன் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே வைத்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும், 12 கிலோ கஞ்சாவையும் தாம்பரம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in