காணும் பொங்கலுக்கு சென்னையில் 1,200 போலீஸ் பாதுகாப்பு: சங்கர் ஜிவால்

காணும் பொங்கலுக்கு சென்னையில் 1,200 போலீஸ் பாதுகாப்பு: சங்கர் ஜிவால்

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் 1,200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், புனரமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா அறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திறந்து வைத்தார். இந்த நிகழச்சியில் பேசிய அவர், மெரினா கடலில் குளிக்க வருபவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி துவக்கப்பட உள்ள நிலையில், மேலும் இது போன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும் என பேசினார்.

காணும் பொங்கல் விழாவையொட்டி சென்னையில் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு பணியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 1200 போலீஸார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட உள்ளதாக அவர் கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in