கமுதி ரேஷன் கடைகளில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட 30 மூட்டை அரிசி பறிமுதல்

பறிமுதல் செய்த ரேஷன் அரிசி: டிரைவர் முத்துக்குமார்
பறிமுதல் செய்த ரேஷன் அரிசி: டிரைவர் முத்துக்குமார்கமுதி ரேஷன் கடைகளில் இருந்து மதுரைக்கு கடத்தப்பட்ட 30 மூட்டை அரிசி பறிமுதல்

கமுதி வட்டார நியாய விலைக் கடைகளில் சேகரித்த 1, 200 கிலோ எடையுள்ள 30 மூட்டை ரேஷன் அரிசியை வாகனத்துடன் போலீஸார் பறிமுதல் செய்து டிரைவரை கைது செய்தனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து ரேஷன் அரிசி மதுரைக்கு கடத்திச் செல்லப்படுவதாக உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மதுரை மண்டல உணவுப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வு எஸ்பி சிநேகபிரியா அறிவுறுத்தல் படி, எஸ்.ஐ சிவஞானபாண்டியன், ஏட்டுகள் குமாரசாமி, முத்து கிருஷ்ணன், தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கமுதி-கீழராமநதி சாலையில் வாகனச்சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற மதுரை பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ வீதம் 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

ராமசாமிபட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில், மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த பாண்டி வேல் என்பவர் ரேஷன் அரிசியை சேகரித்து எடுத்துச் சென்றதாக தெரியவந்தது. இந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார் மதுரையைச் சேர்ந்த டிரைவர் முத்துக்குமாரை கைது செய்தனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in