12 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை; பிடிக்க வந்த எஸ்.ஐ மீது தாக்குதல்: போலீஸை பதறவைத்த போக்சோ குற்றவாளி

12 ஆண்டு தலைமறைவு வாழ்க்கை; பிடிக்க வந்த எஸ்.ஐ மீது தாக்குதல்: போலீஸை பதறவைத்த போக்சோ குற்றவாளி

தமிழக, கேரள எல்லையோரப் பகுதியான கேரளத்தின் இஞ்சிவிளையில் 12 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த போக்சோ குற்றவாளியைப் பிடிக்க போலீஸார் சென்ற போது, காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம், இஞ்சிவிளையைச் சேர்ந்தவர் ஸ்டாலின். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 2010-ம் ஆண்டு அதேபகுதியில் உள்ள ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் அவர்மேல் வழக்குப்பதிந்தனர். ஆனால் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிந்து ஸ்டாலின் தலைமறைவாகிவிட்டார். பாறசாலை போலீஸாரால் 12 ஆண்டுகளாக அவரைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் ஸ்டாலின் தன் சொந்த ஊரான இஞ்சிவிளைக்கு வந்திருப்பதாக பாறசாலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ஜான் உள்ளிட்ட போலீஸார் ஸ்டாலினைப் பிடிக்க மறைந்து இருந்தனர். ஆனால் ஸ்டாலின் போலீஸாரைப் பார்த்ததும், சப்-இன்ஸ்பெக்டர் ஜானை இரும்புக் கம்பியால் தலையில் சரமாரியாகத் தாக்கிவிட்டு தப்பியோடினார். ஆனாலும் மற்ற போலீஸார் சேர்ந்து சுற்றிவளைத்து ஸ்டாலினைக் கைது செய்தனர். இந்தத் தாக்குதலில் படுகாயம் அடைந்த எஸ்.ஐ ஜான், பாறசாலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக எஸ்.ஐ ஜான், திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in