கஞ்சா
கஞ்சாகஞ்சா கடத்தியவர்களுக்கு 12 ஆண்டு சிறை, 1.70 லட்சம் அபராதம்!

ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல்: கிருஷ்ணகிரி, வேலூர் இளைஞர்களுக்கு 12 ஆண்டு சிறை, 1.70 லட்சம் அபராதம்!

ஆந்திராவில் இருந்து 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் இருவருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர்  சென்னை மாதவரம் அருகே ஒரு வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டதில், 8 மூட்டைகளில் 160 கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரங்கநாதன், வேலூரைச் சேர்ந்த செல்வம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.திருமகள் இன்று தீர்ப்பு வழங்கினார்.  அவரது தீர்ப்பில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் அளவு சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறி, இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in