விருத்தாச்சலத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் விபரீத முடிவு

விருத்தாச்சலத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: எதிர்பார்த்த மதிப்பெண்  கிடைக்காததால் விபரீத முடிவு
Updated on
1 min read

எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என மனமுடைந்த பிளஸ் 2 மாணவி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாச்சலம் ஆயர் மடம் தெருவைச் சேர்ந்தவர் கோபி. இவரது 17 வயது மகள் விருத்தாச்சலம் பெரியார் நகரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். இவரால் பாடங்களை முழுமையாக படிக்க முடியவில்லை என்பதோடு, தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு அவரது வீட்டில் பெற்றோர் தூங்கச் சென்றதும், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து இன்று காலை விருத்தாசலம் போலீஸாருக்குத் தகவல் தெரிய வந்தது. அதையடுத்து அவர்கள் விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெற்றோர் உள்ளிட்டவர்களிடம் மாணவியின் தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in