எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 12 பேர் கைது

எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்கள் 12 பேர்  கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் முல்லைத்தீவு அருகே விசைப்படகில் இன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேரையும் கைது செய்தனர். அத்துடன் அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். விசாரணைக்காக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களையும் திரிகோணமலைக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in