பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 10-ம் வகுப்பில் 90.07%; 12-ம் வகுப்பில் 93.76% பேர் தேர்ச்சி

பொதுத்தேர்வு முடிவு வெளியீடு! 10-ம் வகுப்பில் 90.07%; 12-ம் வகுப்பில் 93.76% பேர் தேர்ச்சி

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை வெளியிட்டார்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்2 பொதுத்தேர்வை 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று காலை வெளியிட்டார்.

அதன்படி, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே நேரத்தில் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நண்பகல் 12 மணிக்குத்தான் வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

12-ம் வகுப்பில் 93.76% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்தார். மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 24-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in