எஞ்சின் பழுதால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் மாயம்: கடற்படையினர் தீவிர தேடுதல்

எஞ்சின் பழுதால் நடுக்கடலில் சிக்கிய மீனவர்கள் மாயம்: கடற்படையினர் தீவிர தேடுதல்

கடலுக்குள் மீன் பிடிக்கச்சென்று படகு எஞ்சின் பழுதானதால் மாயமான படகையும், அதிலிருந்த பூம்புகார் மீனவர்கள் 12 பேரையும் இந்திய மற்றும்  இலங்கை கடற்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம்  பூம்புகார் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 25-ம் தேதியன்று பூம்புகார் விஜயரங்கன் மகன் ஜெயச்சந்திரன் (38) என்பவருக்குச் சொந்தமான  விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த சந்திரகுமார் உள்ளிட்ட ஏழு மீனவர்களும்,  மடத்துகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த இரு மீனவர்களும், திருமுல்லைவாசலை சேர்ந்த ஒருவர்,  தரங்கம்பாடியைச் சேர்ந்த இருவர் என 16 பேர் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

கோடிக்கரைக்கு தென்கிழக்கே நேற்று அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானது. இதனால் செய்வதறியாது திகைத்தனர். அப்போது அவ்வழியாக வந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த விசைப்படகில் நான்கு மீனவர்கள் கரை வந்து சேர்ந்தனர். இதுகுறித்து பூம்புகார் மீனவர்களும், கடலோர காவல்படைக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பூம்புகார் படகு மற்றும் மீனவர்களைத் தேடிச் சென்றனர். மீனவர்கள் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தில்  படகு இல்லை. அதனால் அவர்கள் திரும்பினர்.  காற்றின் வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் படகு சென்றிருக்கலாம் எனக் கருதப்படுவதால் இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in