தினமும் 12 மணி நேரம் வேலை... வாரம் 3 நாள் விடுமுறை: 12 மாநிலங்களில் ஜூலை 1 முதல் அமலாகிறது புதிய தொழிலாளர் விதிகள்

தினமும் 12 மணி நேரம் வேலை... வாரம் 3 நாள் விடுமுறை: 12 மாநிலங்களில் ஜூலை 1 முதல் அமலாகிறது புதிய தொழிலாளர் விதிகள்

கூடுதல் வார விடு முறை, அதிகமான பிஎப் தொகை உள்ளிட்ட பல பலன்கள் தரும் புதிய தொழிலாளர் விதிகள் 12 மாநிலங்களில் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

4 முக்கிய திருத்தங்களுடன் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சில மாநிலங்கள் இதற்கான ஒப்புதல் தரவில்லை. அதே நேரத்தில், உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், அருணாசலப் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கண்ட், பஞ்சாப், மணிப்பூர், பிஹார், இமாசலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவை இந்த சட்டத்தை அமல்படுத்த உள்ளன. இந்த மாநிலங்களில் புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த சட்டங்களின்படி, நிறுவனங்கள் ஊழியர்களின் பணி நேரத்தையும் 8 முதல் 9 மணி நேரம் என்பதிலிருந்து 12 மணி நேரம் என அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் அதை ஈடு செய்யும் வகையில் ஊழியர்களுக்கு 3 வார விடுமுறைகளை நிறுவனங்கள் அளிக்க வேண்டும் என்றும் இதனால் தொழிலாளர்கள் ஒரு வாரத்தில் பார்க்கும் மொத்த வேலை நேரம் மாறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய விதிகளின்படி, ஊழியரின் அடிப்படை சம்பளம், மொத்த சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும் என்றும் இது வருங்கால வைப்பு நிதிக்கு ஊழியர் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிக்கும் என்றும் இதன் மூலமாக பிஎப் திட்டத்துக்கு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் அளிக்கும் பங்களிப்பு தொகை உயரும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in